ஆளூர் ஷா நவாஸ் (இயற்பெயர்: ஜெ.முகம்மது ஷா நவாஸ்) (ஏப்ரல் 22, 1982) தமிழ்நாடு, கன்னியாகுமரி மாவட்டம்ஆளூர் கிராமத்தில் பிறந்தவர். இளம் அரசியல்வாதியும், ஊடகவியலாளரும், எழுத்தாளரும், பேச்சாளரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளரும், நாகப்பட்டினம் (சட்டமன்றத் தொகுதி) உறுப்பினரும் ஆவார்.[1]
இவர் 1982ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி, தமிழ் நாட்டின்கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆளூர் என்னும் ஊரில் பிறந்தார்.
இவர் தந்தை ஜெய்னுல் ஆபிதீன், தாயார் - ராபியத் பீவி ஆவர். இவருக்குத் தங்கை ஒருவரும் இருக்கிறார்.[2] இவர் துணைவியார் பர்வீன், மற்றும் மகன் முஹம்மது ரைஹான், மகள் அஸ்ரா ஆவர். கலை, இலக்கிய ஈடுபாடு கொண்டவர். அம்பேத்கர், பெரியார் கொள்கையில் பிடிப்பு கொண்டவர்.[3] ஆதிக்க எதிர்ப்பு, சுரண்டல் எதிர்ப்பு, ஒடுக்குமுறை எதிர்ப்பு, சமத்துவம், சமூக நீதி பாதுகாப்பு ஆகியவற்றை இலக்காகக் கொண்டவர்.[4]
பள்ளிப் படிப்பை ஆளூர் மற்றும் தக்கலையில் பயின்றார்.
இதழியலில் பட்டயப் படிப்பு முடித்துள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் ஆவார். தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று வருகிறார். ஆவணப்பட இயக்குநரும், ஊடகவியலாளரும், எழுத்தாளரும், பேச்சாளரும் ஆவார். 'குருதியில் நனையும் காலம்' எனும் நூலையும் எழுதியுள்ளார். குன்னம் சட்டமன்றத் தொகுதிக்கு 16, மே 2016 அன்று நடைபெற்ற தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் போட்டியிட்டு, 19, 853 வாக்குகள் பெற்றார்.
2021 சட்டமன்றத் தேர்தலில் நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிட்டு 66,281 வாக்குகள் பெற்று, 7238 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் மதிப்பீட்டுக் குழு உறுப்பினராக இருந்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழு உறுப்பினராகவும், தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினராகவும் செயலாற்றி வருகிறார்.
இவர் பர்வீன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கு முகம்மது ரைஹான் என்னும் மகன், அஸ்ரா என்னும் மகள் உள்ளனர். 1999ம் ஆண்டு சென்னைக்கு வந்த இவர்,[5] குடும்பத்துடன் சென்னை எழும்பூரில் வசித்து வருகிறார்.[6]
தேர்தல் வரவு செலவு கணக்கை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். "தமிழக அரசியலில் இப்படியும் ஓர் அதிசயம்" என்று இவரைப் பற்றி ஆனந்த விகடன் வியந்து எழுதியது.
குறிப்பாக அனைத்துப் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று இவர் பேசினார். அத்திட்டம் இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் இப்போது நடைமுறைக்கு வந்துள்ளது.
அதுபோல், பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இருக்கக் கூடாது; மாநில அரசுக்கு தான் இருக்க வேண்டும் என்று பேசினார். அதன்படி தமிழ்நாடு அரசால் மசோதா கொண்டுவரப்பட்டது.
மேலும், நாகப்பட்டினம் தொகுதி சார்ந்து பல்வறு கோரிக்கைகளை சட்டமன்றத்தில் எழுப்பி, அதன்மூலம் நிறைய திட்டங்களை நாகைக்கு கொண்டு வந்துள்ளார். [8].
Copyright ©atomgood.aebest.edu.pl 2025